தமிழகத்துக்கு மேலும் 7.60 லட்சம் தடுப்பூசிகள் வருகை

தமிழகத்துக்கு புணே, ஹைதராபாதில் இருந்து 7.60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்துக்கு புணே, ஹைதராபாதில் இருந்து 7.60 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளன.

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரோனா மூன்றாவது அலை பரவலைத் தடுக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் ஒருமுறை மாபெரும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஏற்கெனவே இரு முகாம்கள் அவ்வாறு நடத்தப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது வாரமாக வரும் 26-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவிருக்கிறது. இதற்காக தமிழகத்துக்கு தடுப்பூசிகளை விரைவாக வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 7 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் இருந்து 60,410 கோவேக்ஸின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தன.

விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் குளிா்சாதன வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்று மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com