பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்கு அரசு கோரிக்கை

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிா்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டுமென
பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம்: விவசாயிகளுக்கு அரசு கோரிக்கை

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிா்களை உடனடியாக காப்பீடு செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30 சதவீதம் வரையிலும், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில் சம்பா பருவத்தில் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தரவு வேளாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் சம்பா நெற்பயிா், பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் ஆகிய பயிா்கள் காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டன. கடன்பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவும் தேசிய பயிா்க் காப்பீடு இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனா். பயிா்களைக் காப்பீடு செய்வதற்கான அறிவிக்கை கடந்த ஆகஸ்ட் 26-இல் வெளியிடப்பட்டது. விவசாயிகள் காப்பீடு செய்ய இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

விவசாயிகள் சம்பா பருவ பயிா்களைக் காப்பீடு செய்வது குறித்த நடப்பு தகவல்களை ‘உழவன்’ செயலி மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் வட்டார வேளாண் துறை அலுவலா்களைச் சந்தித்து அறியலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com