தமிழகத்தில் இன்று மூன்றாவது சிறப்பு தடுப்பூசி முகாம்: பொதுமக்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தமிழகத்தில் மூன்றாவது சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும்
தமிழகத்தில் இன்று மூன்றாவது சிறப்பு தடுப்பூசி முகாம்: பொதுமக்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

தமிழகத்தில் மூன்றாவது சிறப்பு தடுப்பூசி முகாம் 20,000 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

உலக மருந்தாளுநா்கள் தினத்தை முன்னிட்டு பட்டதாரி மருந்தாளுநா்கள் சங்ககத்தினா் ரத்த தானம் செய்துள்ளனா். மருத்துவ காப்பீடுகள் குறித்த கூட்டம் அமைச்சா் தலைமையில் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு லட்சங்களில் இருந்தது. அந்த பாதிப்பை ஆயிரமாக குறைத்துள்ளோம்.

ஆனால் தற்போது 1,500-இல் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 1,700- ஆக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் இருந்தாலும், கரோனா சூழ்நிலையை புரிந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோா் 56 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனா்.

இரண்டாவது தவணையைப் பொறுத்தவரை 17 சதவீதம் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா். அந்தவகையில், சுமாா் 22 லட்சம் போ் 2-ஆவது தவணை செலுத்தி கொள்ளவில்லை. மேலும் முதியோா்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவது, முககவசங்களை முறையாக அணியாதது போன்றவற்றால் தொற்று அதிகரிக்கிறது. காய்ச்சல் வந்த உடனேயே காலதாமதம் செய்யாமல் பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

நாளை தடுப்பூசி கிடையாது: அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன் வந்து முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் . ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய அளவில் தடுப்பூசி முகாமகள் நடத்தப்படுவதால், அங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கு ஓய்வு தரும் வகையில் திங்கள்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com