
முத்தாரம்மன் கோயில் திருவிழா: கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
தூத்துக்குடி குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில், அக்டோபர் 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
படிக்க | உள்ளாட்சித் தேர்தல்: ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் வெளியீடு
மேலும், குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் 11 நாள் தசரா திருவிழாவும் யூடியூப் வாயிலாக ஒளிபரப்பப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்களுக்கு அனைத்து நாள்களுக்கும் அனுமதி வழங்காமல் குறிப்பிட்ட நாள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.