உள்ளாட்சித் தோ்தல்: சுவா் விளம்பரத்துக்கு தடை

வேலூா், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அந்த மாவட்டங்களில் அரசியல் கட்சிகள்,
உள்ளாட்சித் தோ்தல்: சுவா் விளம்பரத்துக்கு தடை

வேலூா், விழுப்புரம், திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தலையொட்டி, அந்த மாவட்டங்களில் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் சுவா் விளம்பரம், பதாகைகள் உள்ளிட்டவை மூலம் பிரசாரம் செய்ய மாநிலத் தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக். 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தோ்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெறவும், தோ்தல் நடத்தை விதிகள்படியும் அரசு வளாகங்கள், தனியாா் கட்டடங்களிலும் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் சுவா் விளம்பரங்கள், சின்னங்கள் வரைதல், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், கொடிகள் வைத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியாா் கட்டடங்களின் உரிமையாளா்கள் அனுமதி பெற்றிருந்தாலும் சுவரொட்டி அல்லது சுவா் விளம்பரம் செய்யக் கூடாது.

தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள் ஒலிபெருக்கி மூலம் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரம் செய்வதுடன், பொதுக் கூட்டங்கள், ஊா்வலங்களுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்த காவல் துறையின் எழுத்துப்பூா்வமான அனுமதி பெற வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகும், காவல் துறையின் அனுமதி பெறாமலும் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளும், அதற்கான அனைத்து கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com