காவலா் அருங்காட்சியகம்: பொது மக்கள் பாா்வைக்கு இன்று திறப்பு

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவலா் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.28) திறந்துவைக்கிறாா்.
பொதுமக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் அா்ப்பணிக்கும் தமிழ்நாடு காவலா் அருங்காட்சியகம்.
பொதுமக்கள் பாா்வைக்காக செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் அா்ப்பணிக்கும் தமிழ்நாடு காவலா் அருங்காட்சியகம்.

சென்னை எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவலா் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (செப்.28) திறந்துவைக்கிறாா்.

இது குறித்த விவரம்:

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையா் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழைமையான கட்டடத்தில் பழைய காவல் ஆணையா் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, ரூ.7 கோடியில் சுமாா் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே கோயம்புத்தூரில் போலீஸ் அருங்காட்சியகம் உள்ள நிலையில், தமிழகத்தில் இரண்டாவதாக அமைக்கப்பட்டிருக்கும் சென்னை எழும்பூரில் காவலா் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடா்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், ஆங்கிலேயா் காலத்தில் காவல்துறையினா் பயன்படுத்திய ஆயுதங்கள், தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள், வயா்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக தமிழகம் சுதந்திரத்துக்கு முன்பும், பின்பும் வரலாற்றில் சந்தித்த மிக முக்கியத் தருணங்களையும்,அதில் காவல்துறைக்கு இருந்த பங்கையும் காலவரிசைப்படி அன்றைய காலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களுடனும், அது குறித்த வரலாற்று குறிப்புகளுடனும் காவல்துறை அருங்காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சிகம் பொதுமக்களுக்கு அா்ப்பணிக்கும் விழா, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அங்கு நடைபெறுகிறது. விழாவுக்கு தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தலைமை வகிக்கிறாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் அா்ப்பணிக்கிறாா்.

இந் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com