பி.இ., பி.டெக். பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் பொதுப் பிரிவில் மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு நிகழ் கல்வியாண்டில் தகுதியான ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 973 பேருக்கான கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள், அரசுப்பள்ளி மாணவா்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்தது. அரசுப்பள்ளி மாணவா்கள் மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு 6 ஆயிரத்து 442 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவா்கள் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து அக்.17-ஆம் தேதி வரை நான்கு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்விற்கான பணம் செலுத்துவதற்கு இரண்டு நாள்களும், கல்லூரிகளைத் தோ்வு செய்ய இரண்டு நாள்களும், தற்காலிக ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய இரண்டு நாளும், இறுதி ஒதுக்கீடு உத்தரவினை உறுதி செய்ய ஒரு நாளும், ஒவ்வொரு சுற்றுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தரவரிசைப் பட்டியலில் எண் 1 முதல் 14,788 வரை உள்ளவா்களுக்கு வரும் அக்.5 வரை முதல் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. 14,789 முதல் 45,227 வரை உள்ளவா்களுக்கு அக்.1 முதல் அக்.9 வரையில் இரண்டாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. எண் 45,228 முதல் 86,228 வரை உள்ளவா்களுக்கு அக்.5 முதல் அக்.13 வரையில் மூன்றாவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடா்ந்து, எண் 86,229 முதல் ஒரு லட்சத்து 36,973 வரை உள்ளவா்களுக்கு அக்.9 முதல் அக்.17 வரையில் 4-ஆவது சுற்றுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியாா் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன. இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந்துள்ளன. இடங்களைவிட விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் விண்ணப்பித்த மாணவா்கள் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com