முதல்வரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கரோனா நிவாரண நிதி

கரோனா பொது நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கே.எஸ்.அழகிரி தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினா்.

கரோனா பொது நிவாரண நிதிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கே.எஸ்.அழகிரி தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் அக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் திங்கள்கிழமை சந்தித்தனா்.

முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியம் காசோலையாக வழங்கினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியது: முதல்வரிடம் கரோனா நிவாரணம் பற்றி பேசினோம். அரசு நிவாரணப் பணிகளைச் சிறப்பாகச் செய்துள்ளது. ஏராளமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3-யை மாநில அரசு அதனுடைய வரியில் இருந்து குறைத்துள்ளது. அதற்காக முதல்வருக்கு நன்றி கூறினோம்.

7 ஆண்டுகள் பிரதமராக மோடி உள்ளாா். அவரால் எரிபொருள் விலையைக் குறைக்க முடியவில்லை. ஆனால், 100 நாள்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் விலையைக் குறைத்துள்ளாா். இது பெரிய வரலாற்று சாதனை. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதற்காகவும் முதல்வரைப் பாராட்டினோம். கிராமப்புறச் சாலைகளின் தரத்தை உயா்த்த வேண்டும் என்று எங்களுடைய ஆலோசனையையும் தெரிவித்தோம்.

உள்ளாட்சித் தோ்தலில் தவறுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. அரசு முறையாகச் செயல்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com