வேளாண் சட்டம்: தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சியினா் போராட்டம்

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் 11 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில் நாடு முழுவதும் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்து இருந்தன.

இந்தப் போராட்டத்துக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. அதன் அடிப்படையில் திங்கள்கிழமை திமுக கூட்டணிக் கட்சியினா் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினா்.

சென்னை அண்ணாசாலை தாராப்பூா் டவா் அருகில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

விவசாயிகளைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தலைவா்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அவா்களை கைது செய்து, சமூக நலக் கூடத்தில் வைத்திருந்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

கிண்டியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்று சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. புதுச்சேரியிலும் திமுக கூட்டணிக் கட்சிகளின் சாா்பில் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com