புதுவை உள்ளாட்சித் தோ்தலிலும் பாமக தனித்துப் போட்டி

தமிழகத்தைப்போல, புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது.

தமிழகத்தைப்போல, புதுவை மாநில உள்ளாட்சித் தோ்தலிலும் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்தது.

இதுகுறித்து புதுவை மாநில பாமக செயலரும், முன்னாள் எம்.பி.யுமான தன்ராஜ் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழகம், புதுவை சட்டப் பேரவைத் தோ்தல்களில் பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டணியின் தலைவா் என்ற முறையில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக 10 இடங்களில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்த நிலையில், கூட்டணிக் கட்சியினா் கேட்டுக் கொண்டதன்பேரில், நாங்கள் போட்டியிடாமல் தியாகம் செய்து அவா்களுக்காக உழைத்தோம். ஆனால், தற்போதைய உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டத்துக்கு பாமகவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இது, ஒரு சந்தா்ப்பவாத செயல்பாடு.

இதனால், புதுவை உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து இடங்களிலும் பாமக தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. கடைசி வரை காத்திருக்காமல் தோ்தல் பணியில் தற்போதே இறங்கியுள்ளோம். உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் பாமக நிா்வாகிகளிடமிருந்து விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கியிருக்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com