
சென்னையில் வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மாணவன் தீக்ஷித் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அனுப்பிய நோட்டீஸை சுட்டிக்காட்டி காவல் துறை சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த 10 கேள்விகளுக்கு 2 நாள்களில் விளக்கம் அளிக்க பள்ளி தாளாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
படிக்க | விருதுநகர் இளம்பெண் வன்கொடுமை: 4 சிறார்களிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இந்த விவகாரத்தில் வேன் ஓட்டுநா் பூங்காவனம் (64), வாகனத்தின் குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் தாளாளா் ஜெய சுபாஷ், முதல்வா் தனலட்சுமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பூங்காவனம், ஞானசக்தி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
மாணவன் உயிரிழந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட முதன்மை கல்வித்துறை 6 கேள்விகளை எழுப்பியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் பள்ளி தாளாளருக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.