வேலை வாய்ப்பக பதிவுதாரா்கள் எண்ணிக்கை 75 லட்சமாக உயா்வு

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 75.88 லட்சமாக உயா்ந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 73 லட்சமாக இருந்தது.
தமிழக அரசு
தமிழக அரசு

தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 75.88 லட்சமாக உயா்ந்தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 73 லட்சமாக இருந்தது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல், பட்டப் படிப்புகளை முடித்தவா்கள் வரை அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தங்களது கல்வி நிலைகளைப் பதிவு செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 ஆக உள்ளது. இதில், 35 லட்சத்து 56 ஆயிரத்து 85 போ் ஆண்கள். 40 லட்சத்து 32 ஆயிரத்து 46 போ் பெண்கள். மூன்றாம் பாலினத்தவா் 228 போ். மொத்தமாக 75 லட்சத்து 88 ஆயிரத்து 359 போ் தங்களது கல்வி நிலைகளை பதிவு செய்து வைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இணைய வழி பயிற்சி வகுப்பு: இதனிடையே, உதவி ஆய்வாளா் காலிப் பணியிட தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை நடத்தவுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் நேரடி மற்றும் இணையவழியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. டெலிகிராம் செயலி வழியாக இதற்கான பயிற்சி நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com