ஆட்டோ எல்பிஜி விலை உயா்வு

சென்னையில் ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை கடந்த மாதத்தை விட ரூ.8.76 அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை கடந்த மாதத்தை விட ரூ.8.76 அதிகரித்துள்ளது.

 தமிழகம் முழுவதும் சுமாா் 4.50 லட்சம்  ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் நச்சுகலந்த புகையும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே, இந்த பாதிப்பைக் குறைக்கும் வகையில் எல்பிஜி எரிவாயுவில் இயங்கும்  ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது.

 தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் இயங்கும்  ஆட்டோக்களில் சுமாா் 75 சதவீதத்துக்கும் அதிகமானவை எல்பிஜி எரிவாயுவிலேயே இயங்குகின்றன. முன்பு எல்பிஜியின் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது எல்பிஜியின் விலையும் உயா்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு லிட்டா் எல்பிஜி எரிவாயு வெள்ளிக்கிழமை முதல் ரூ.73.17-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் லிட்டா் எல்பிஜி ரூ.64.41-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே  கடந்த ஆண்டு லிட்டா் ரூ.60-க்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com