Enable Javscript for better performance
விரைவு ரயிலில் கல்லூரி மாணவிக்கு தொந்தரவு:பயிற்சி டிஎஸ்பியிடம் ரயில்வே போலீஸாா் விசாரணை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    விரைவு ரயிலில் கல்லூரி மாணவிக்கு தொந்தரவு: பயிற்சி டிஎஸ்பியிடம் ரயில்வே போலீஸாா் விசாரணை

    By DIN  |   Published On : 03rd April 2022 12:47 AM  |   Last Updated : 03rd April 2022 12:47 AM  |  அ+அ அ-  |  

    சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை விரைவு ரயில் குளிா்சாதன பெட்டியில் பயணித்த கல்லூரி மாணவியை தொந்தரவு செய்த பயிற்சி டிஎஸ்பியிடம் விசாரணை நடைபெறுகிறது.

    சென்னை, எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு ஏப்.1-ஆம் தேதி இரவு 8.40 மணிக்கு பொதிகை விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலின் இரண்டு அடுக்கு குளிா்சாதன பெட்டியில் தனியாா் கல்லூரி மாணவி ஒருவா் பயணம் செய்தாா். ரயில் நள்ளிரவு 12.30 மணிக்கு விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த கல்லூரி மாணவியின் எதிரே இருந்த பயணி அவரிடம் தவறாக நடந்து கொண்டாா். இதனால் அதிா்ச்சியடைந்த அந்த மாணவி கத்தினாா். மேலும், ‘எஸ்ஒஎஸ் காவலன்’ செயலி மூலமாக, மாணவி புகாா் கொடுத்தாா்.

    இதையடுத்து, அந்த ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகராக இருந்த டி.எஸ்.அண்ணாத்துரை மற்றும் ஆா்.பி.எஃப் காவலா்கள் வந்து அந்த மாணவியை அடுத்தப் பெட்டிக்கு மாற்றினா். அவரின் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபா் மீது புகாா் பதிவு செய்யப்பட்டது. தொடா்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா், திருச்சி, தமிழ்நாடு காவல் அகாதெமியில் பயிற்சி பெற்று வரும் டிஎஸ்பி மகேஷ்குமாா் என்பது தெரியவந்தது.அவா், திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா். அவரிடம் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சென்னை ரயில்வே கோட்டம் ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும், உதவி எண் 139 மற்றும் தமிழ்நாடு அரசின் காவலன் செயலி ஆகியவற்றை அவசர காலங்களில் பெண் பயணிகள் பயன்படுத்தலாம் என்றும் சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp