விழுப்புரம்: மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஸ்டாலின்

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களிடமும் நேரடியாக சென்று உரையாடியதோடு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
விழுப்புரம்: மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஸ்டாலின்
விழுப்புரம்: மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஸ்டாலின்

விழுப்புரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களிடமும் நேரடியாக சென்று உரையாடியதோடு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.24 கோடிமதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 10,722 பயனாளிகளுக்கு ரூ.42.70 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (5.4.2022) விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், ஒழுந்தியாம்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற 38 திட்டப் பணிகளை திறந்து வைத்து, 42 கோடியே 69 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை 10,722 பயனாளிகளுக்கு வழங்கினார்.

முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்..

திருவெண்ணெய்நல்லூரில் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம், கொழுவாரி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம்,
விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகக் கட்டடம்,
அன்னியூர் ஊராட்சி அலுவலகக் கட்டடம், காணை ஊராட்சி அலுவலகக் கட்டடம்,  சி.என் பாளையம் ஊராட்சி அலுவலகக் கட்டடம், கஞ்சனூர் ஊராட்சியில் தானிய கிடங்கு, ஆசாரங்குப்பம் ஊராட்சி அலுவலகக் கட்டடம், தென்னமாதேவி ஊராட்சி அலுவலகக் கட்டடம், 
கோலியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடம், தீவனூர் ஊராட்சி அலுவலகக் கட்டடம், கொனமங்கலம் ஊராட்சி அலுவலகக் கட்டடம், ஆசூர் ஊராட்சியில் பால் சேகரிப்பு மையக் கட்டடம், புலியனூர் ஊராட்சியில் உணவு தானியக் கிடங்கு, மயிலம் ஊராட்சியில் சிறுபாலம், கொடியம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், பாஞ்சாலம் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், செம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமயலறைக் கூடம், ஆமூர் ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம், கொட்டிக்கல்பாறை கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை கட்டடம், தடாகம் ஊராட்சி அலுவலகக் கட்டடம்,

தென்புத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக் கட்டடம், வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம், சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 10 வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர், விழுப்புரத்தில் கனிமம் மற்றும் சுரங்கவியல் துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம், விழுப்புரம் நகராட்சி அலுவலகக் கட்டடம், பெரிய தச்சூரில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், ராதாபுரத்தில் புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம், விழுக்கத்தில் துணை சுகாதார நிலையக் கட்டடம், வெளியனூரில் துணை சுகாதார நிலையக் கட்டடம், பிடாகத்தில் கால்நடை மருந்தகக் கட்டடம், திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் பயிற்சி மையக் கட்டடம், அன்னியூரில் துணை வேளாண் விரிவாக்கக் கட்டடம், 

பரங்கனியில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம், கிளியனூரில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம், மரக்காணம் வட்டாரம், சிறுவாடியில் (முருக்கேரி) துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம், வல்லம் வட்டாரம், பென்னகரில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம்;

என மொத்தம் 24 கோடியே 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 38 திட்டப்பணிகளை தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பால்வளத்துறை, தாட்கோ, கூட்டுறவுத்துறை, தொழில் வணிகத்துறை, மீன்வளத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 42 கோடியே 69 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10,722 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின், பயனாளிகளிடமும், பொதுமக்களிடமும் நேரடியாக சென்று உரையாடியதோடு, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார். ஸ்டாலின், தங்களை சந்தித்து உரையாடி, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com