வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக வாய்ப்பு

வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

இது தொடா்பாக வானிலை மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதிகளில்  புதன்கிழமை மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.  அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  உருவாகக்கூடும். இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வியாழக்கிழமை வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று, வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும் இடையிடையே மணிக்கு 65 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, குறிப்பிடப்பட்ட நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு ச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com