நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின் முக்கிய அம்சங்கள்

சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் முழு விவரம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின் முக்கிய அம்சங்கள்
நீர்வளத்துறை மானியக் கோரிக்கையின் முக்கிய அம்சங்கள்


சென்னை: சட்டப்பேரவையில் நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் முழு விவரம் இங்கே அளிக்கப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில்..

சென்னையில் போரூர், புழல், செம்பரம்பாக்கம், வெள்ளிவாயல், மணலிபுதூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தடுக்க 8 வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ.250 கோடியில் மேற்கொள்ளப்படும்.

சென்னை, போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஏரிவரை மூடுகால்வாய் அமைக்கும் பணி ரூ.39.60 கோடியில் செயல்படுத்தப்படும்.

பள்ளிக்கரணை அணை ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை ரூ.57.70 கோடியில் பெரிய மூடுகால்வாய் அமைக்கப்படும்.

திருச்சி மண்டலத்தில் காவிரி முறைப்பாசனப் பகுதிகளில் பருவ மழைக்கு முன்பாக செயலாக்கப்பட்டு வரும் சிறப்புத்தூர்வாரும் பணிகள் போல கோவை, மதுரையில் உள்ள ஆற்று அமைப்புகளில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை, திருப்பூரில் ரூ.33.43 கோடியில் கண்மாய்களை புனரமைக்கப்படும்.

பத்து மாவட்டங்களில் 200 கண்மாய்களில் பிரதமரின் வேளாண் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் ரூ.200.22 கோடியில் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும்.

கோதையாறு, கொள்ளிடம், வெண்ணாறு மற்றும் பரம்பிக்குளம்  - ஆழியார் வடிநில பாசனக் கட்டமைப்புகளை ஒருங்கிணைந்த முறையில் மறுசீரமைப்பு செய்ய வெளிப்புற நிதி உதவி பெற ஏதுவாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கம் பணி ரூ.31.15 கோடியில் மேற்கொள்ளப்படும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் துணைக்கோள் உதவியுடன் சென்னை மற்றும் அதன் சுற்றவட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆக்ரமிப்புகளை கண்காணிக்க, நீரின் தன்மையை ஆராய முன்னோடித் திட்டமாக ஒரு செயலி உருவாக்கப்படும்.

சென்னைக்கு கூடுதல் நீர் வழங்க, வெள்ளத்தணிப்பு, காலநிலை மாற்றத்தை எதிகொள்ள ரூ.5.12 கோடியில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்.

டென்மார்க் நாட்டின் நவீன தொழில்நுட்பமான டி-டெம் பயன்படுத்தி நிலத்தடி நீர் இருப்பை கண்டறிய, விவரணை தயாரிக்க சோதனை அடிப்படையில் ஒரு திட்டம் மேற்கொள்ளப்படும்.

நீரின் தரத்தை நீர் நிலைகளிலேயே கண்காணிக்க ஏதுவாக, 400 நீர்த் தன்மை ஆய்வு உபகரணத் தொகுப்புகள் ரூ.1.40 கோடியில் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com