சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது: பேரவையில் முதல்வர் விளக்கம்

உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாதது: பேரவையில் முதல்வர் விளக்கம்

உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையால் சொத்து வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என  முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் விளக்கமளித்துள்ளார். 

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியுள்ளது. துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வரும் நாள்களில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து பேரவையில் விளக்கமளித்தார். 

அப்போது பேசிய அவர்,

மக்களின் வளர்ச்சித் திட்டங்கள் தேக்க நிலையை அடைந்திருந்ததது. மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பற்றாக்குறையால் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றக்கூட சிரமம் ஏற்பட்டது. 

ஆனால் இப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்கு திட்டங்கள் வகுத்து அரசிடம் நிதியை எதிர்பார்ப்பார்கள். 

எனவே, அடித்தர, ஏழை, நடுத்தர மக்களை பாதிக்காமல் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியை மனதில் கொண்டு சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால் முதல்முறையாக, கட்டட பரப்பளவை அடிப்படையாக வைத்து சொத்து வரி நிர்ணயம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

நகர்புறத்தில் உள்ள குடியிருப்புகளில் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் சொத்து வரி உயர்வினால் 83% மக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதே உண்மை. 

மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஆதாரம் தேவை. எனவே, சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது. 

கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அனைத்துக் கட்சிகளும் துணை நிற்க வேண்டும். 

மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்ய வேண்டாம் என்று எதிர்கட்சித் தலைவர் மட்டுமின்றி அனைத்துக் கட்சியினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com