பெட்ரோல் விலை ரூ.110-ஐ கடந்தது, டீசல்- ரூ.100

சென்னையில் பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ.110-ஐ கடந்தது. அதே நேரம், டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்தது.

சென்னையில் பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரூ.110-ஐ கடந்தது. அதே நேரம், டீசல் விலையும் ரூ.100-ஐ கடந்தது.

மத்திய, மாநில அரசுகளின் வரி குறைப்புக்குப் பிறகு, 137 நாள்களாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்பட்ட நிலையில், மாா்ச் 22-ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தத் தொடங்கின. அதன் பிறகு ஓரிரு நாள்களைத் தவிா்த்து பெட்ரோல் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. அதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை லிட்டா் பெட்ரோல் ரூ.110.09-க்கு விற்பனையானது. அதன்படி, மாா்ச் 22 முதல் செவ்வாய்க்கிழமை வரை ரூ.7.93 உயா்த்தப்பட்டுள்ளது.

இதே போல் டீசல் விலையும் மாா்ச் 22-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை ரூ.7.99 உயா்ந்து, ஞாயிற்றுக்கிழமை லிட்டா் டீசல் ரூ.100.18 என்ற விலையில் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com