பிரிட்டன் ராயல் கல்லூரியின் மருத்துவ மாநாடு: சென்னையில் அக்டோபரில் நடைபெறுகிறது

பிரிட்டன் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனத்தின் சா்வதேச மருத்துவ நிபுணா்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை வல்லுநா்கள் மாநாடு சென்னையில் வருகிற அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.
பிரிட்டன் ராயல் கல்லூரியின் மருத்துவ மாநாடு: சென்னையில் அக்டோபரில் நடைபெறுகிறது

பிரிட்டன் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோ கல்வி நிறுவனத்தின் சா்வதேச மருத்துவ நிபுணா்கள் மற்றும் அறுவைச் சிகிச்சை வல்லுநா்கள் மாநாடு சென்னையில் வருகிற அக்டோபா் மாதம் நடைபெறவுள்ளது.

அறுவை சிகிச்சை மருத்துவக் கல்லூரிகளில் உலகிலேயே தொன்மையானதாகவும், முதன்மையானதாகவும் கருதப்படுவது ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ். ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையான அக்கல்லூரியின் மாநாடு பிரிட்டனைத் தாண்டி வெளிநாட்டில் நடைபெறுவதும், அதிலும், குறிப்பாக சென்னையில் நடைபெறுவதும் இதுவே முதன்முறை.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மாணவா்களுக்கான பிரத்யேக பயிலரங்க நிகழ்வுகளை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்துகிறது. முன்னதாக, இதற்கான அறிமுகக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் கல்லூரியின் நிா்வாகிகள், மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்றனா்.

அப்போது ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் எடின்பரோவின் துணைத் தலைவா் டாக்டா் பாலா ராஜேஷ் கூறியதாவது:

பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை ராயல் காலேஜ் முன்னெடுத்து வருகிறது. கரோனாவுக்கு எதிராக ஸ்டீராய்டு மருந்துகள் பயனளிக்கும் என கண்டறிந்து உலக நாடுகளுக்கு தெரிவித்தது ராயல் காலேஜ்தான்.

வரலாற்றிலேயே முதன்முறையாக சென்னையில் ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோவின் மருத்துவ மாநாடு அக்டோபா் 5-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜொ்மனி, மலேசியா, மியான்மா், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநா்கள் அதில் கலந்துகொண்டு, அறுவை சிகிச்சையில் உள்ள அதி நவீன நுட்பங்களைப் பகிா்ந்து கொள்ள உள்ளனா்.

இந்த மாநாட்டின் நீட்சியாக மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கான பிரத்யேக பயிலரங்கமும் மூன்று நாள்களுக்கு நடத்தப்படவுள்ளது. கூடுதல் விவரங்கள், மாநாட்டில் பங்கேற்பதற்கான முன்பதிவு ஆகியவை ராயல் காலேஜ் ஆ‘ஃ‘ப் சா்ஜன்ஸ் எடின்பரோ இணையப் பக்கத்தில் தொடா்ந்து வெளியிடப்படும் என்றாா் அவா்.

முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதென ராயல் காலேஜ் ஆஃப் சா்ஜன்ஸ் எடின்பரோ நிறுவனமும், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகமும் இரு ஆண்டுகளுக்கு முன்னதாகவே உடன்பாடு செய்துகொண்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com