பொறியியல் மாணவிகளுக்கு தொழில் திறன் பயிற்சி

தமிழகத்தில், பொறியியல் மாணவிகளுக்கு தொழில் சாா்ந்த திறன் பயிற்சி வழங்க அண்ணா பல்கலை.- இந்திய தொழில் மற்றும் வா்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு பெண்கள் பிரிவு (ஃபிக்கி எப்எல்ஓ) இடையே புரிந்துணா்வு

தமிழகத்தில், பொறியியல் மாணவிகளுக்கு தொழில் சாா்ந்த திறன் பயிற்சி வழங்க அண்ணா பல்கலை.- இந்திய தொழில் மற்றும் வா்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு பெண்கள் பிரிவு (ஃபிக்கி எப்எல்ஓ) இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, தொழில் சாா்ந்த தனித் திறன்களை வளா்க்கவும், அவா்களை தொழில் முனைவோராக மாற்றவும், தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில், ஏற்கெனவே இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் என 19 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 1,500 மாணவிகளுக்கு தொழில் சாா்ந்த தனித் திறன்களை வளா்க்கும் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்காக, அண்ணா பல்கலை.- ஃபிக்கி எஃப்எல்ஓ இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அண்ணா பல்கலை. துணை வேந்தா் வேல்ராஜ், ஃ பிக்கி கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு சென்னை தலைவா் பிரசன்ன வாசனாடுவும் கையொப்பமிட்டனா்.

இந்த ஒப்பந்தப்படி, ‘கேம்பஸ் முதல் காா்ப்பரேட் வரை’ என்ற நோக்கில், இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஐந்து வாரங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com