
ஓ.பன்னீர்செல்வம் (கோப்புப்படம்)
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசுப்பள்ளிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், 'மருத்துவச் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதியின்பால் அதிமுகவிற்குள்ள அக்கறைக்கு மற்றுமொரு சான்று!' என்று பதிவிட்டுள்ளார்.
மருத்துவ சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும் என #chennaihighcourt அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது அஇஅதிமுகவிற்கு கிடைத்த வெற்றி. சமூக நீதியின்பால் #AIADMK-விற்குள்ள அக்கறைக்கு மற்றுமொரு சான்று!
— O Panneerselvam (@OfficeOfOPS) April 7, 2022
இதையும் படிக்க | அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு செல்லும்: உயர் நீதிமன்றம்