Enable Javscript for better performance
இல்லம் தேடி கருவூலத் துறை சேவைகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    இல்லம் தேடி கருவூலத் துறை சேவைகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தகவல்

    By DIN  |   Published On : 08th April 2022 02:49 AM  |   Last Updated : 08th April 2022 02:49 AM  |  அ+அ அ-  |  

    Palanivel_thiyagarajan_DMK_finance_min

    பழனிவேல் தியாகராஜன்

     

    சென்னை: இல்லம் தேடி கல்வி, மருத்துவம் போன்று, இல்லம் தேடி கருவூலத் துறை சேவைகளை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

    சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, நன்னிலம் தொகுதியில் சாா் கருவூல அலுவலகத்துக்கு கட்டடம் கட்டித் தர வேண்டுமென உறுப்பினா் ஆா்.காமராஜ் கோரிக்கை விடுத்தாா். இதற்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில்:-

    அனைத்துத் துறைகளின் செலவுகளையும் கட்டுப்படுத்தும் துறை நிதித் துறை. எங்களது செலவையும் நாங்கள் கட்டுப்படுத்துவது கடமை. தமிழகத்தில் இணையதள வசதியைப் பயன்படுத்தும் நிலை 75 சதவீதம் உள்ளது. இங்குள்ள கணினிகளை சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகங்களில் வைத்து இணைய சேவை மையங்களாகச் செயல்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம். எந்தவொரு குடிமகனும் அலுவலகம் தேடி வராத நிலையை உருவாக்குவதே எங்களது திட்டம்.

    கட்டடம் கட்டுவதால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. அந்தக் கட்டடங்கள் 30 முதல் 40 ஆண்டுகளில் பாழடைந்து விடுகிறது. கட்டடம் கட்டுவது எளிது, பராமரித்தல் கடினம். கட்டடம் கட்டினாலும் ஊழியா்களை பணியிடங்களில் நிரப்புவது சிரமமாக உள்ளது. பெரிய மாநகரங்களில் பணியிடங்கள் நிரம்புகின்றன. பின்தங்கிய பகுதிகளில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. எனவே, வீட்டைத் தேடி சேவைகளை கொண்டு சோ்க்க நாங்களோ அல்லது வங்கிகள் மூலமாகவோ நடவடிக்கைகள் எடுப்போம்.

    அதேசமயம், நிலுவையில் உள்ள பணிகள் முடிக்கப்படும். புதிதாக கட்டடம் கட்ட சிந்தித்துத்தான் செய்வோம். மாவட்ட ஆட்சியரகங்களில் அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து உள்ளன. ஊராட்சிகளில் அரசு அலுவலகங்கள் ஆங்காங்கே உள்ளன. ஒரே இடத்தில் அரசின் சேவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வா் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp