கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி? மா. சுப்பிரமணியன் விளக்கம்

உடனடியாக கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்கும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி? மா. சுப்பிரமணியன் விளக்கம்
கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி? மா. சுப்பிரமணியன் விளக்கம்

உடனடியாக கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்கும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (08.04.2022) சட்டபேரவையில் மருத்துவத் துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார், அதன் விவரம் வருமாறு, 
கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அருகில் சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் தற்போது 50 இருக்கைகளுடன் அரசு செவிலியர் கல்லூரியும், 100 இருக்கைகளுடன் அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியும், பக்கத்தில் இருக்கிற இன்னொரு மாவட்டமான கடலூரில் 50 இருக்கைகளுடன் செவிலியர் பள்ளியும் செயல்பட்டு வருவதால், உடனடியாக கள்ளக்குறிச்சியில் புதிய செவிலியர் பயிற்சிக் கல்லூரி துவங்கும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை. 

2011 ஆம் ஆண்டு வணக்கத்திற்குரிய தமிழகத்தின் முதல்வராக இருந்த கருணாநிதி, மாவட்டதிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து, அதன் தொடர்ச்சியாக வந்த மருத்துவக் கல்லூரிகள்தான் அந்த 11 மருத்துவக் கல்லூரிகள் என்பதை தொடர்ந்து பல முறை நான் இந்த அவையில் பதிவு செய்திருக்கிறேன். என்றாலும்கூட, சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்காக ஒரு தகவல். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் செவிலியர் படிப்பில் டிப்ளமோ 25 இடங்களிலும், பிஎஸ்சி (செவிலியர்) 6 இடங்களிலும், போஸ்ட் பிஎஸ்சி,(செவிலியர்) 2 இடங்களிலும், எம்.எஸ்சி,(செவிலியர்) 3 இடங்களிலும் என மொத்தம் 36 கல்லூரிகள் இருக்கின்றன. இதன் மூலம் 2,621 இருக்கைகள் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் 21 மாவட்டங்களில் மட்டுமே இந்தப் பயிற்சிக் கல்லூரிகள் இருப்பதால் தமிழக முதல்வர் அர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, நிதிநிலைமைக்கேற்ப, விடுபட்ட பிற மாவட்டங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு செவிலியர் கல்லூரி என்கின்ற வகையில் எதிர்காலத்தில் இந்தப் பயிற்சிக் கல்லூரிகள் கொண்டுவரப்படும்.

நான் ஏற்கனவே சொன்னதைப்போல், 21 மாவட்டங்களில் 36 கல்லூரிகள் இருந்து கொண்டிருக்கின்றன. மீதமுள்ள மாவட்டங்களிலும் இதுபோன்ற கல்லூரிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிதிநிலைமைக்கேற்ப ஆராயப்படும்.

கடந்த வாரம் தமிழகத்தின் முதல்வர், எங்களை தில்லியில்  மத்திய அமைச்சரைச் சந்தித்து இதுசம்பந்தமான கோரிக்கையை விடுக்கச் செய்தார். அந்தவகையில், பெரம்பலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம். நிச்சயம் வரும் என்று எதிர்பார்த்தும் இருக்கிறோம். 

தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டம், வட்டம் சாரா மருத்துவமனைகளில் எங்கேயெல்லாம் அந்த மருத்துவமனைகளுக்கான கூடுதல் அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறதோ அவைகளையெல்லாம் 15-வது நிதி ஆணையத்தின்படி இந்த ஆண்டு 800 கோடி ரூபாய்க்கும் மேலான செலவினங்களில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், ஏற்காடு தொகுதிக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com