மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்? அமைச்சா் பெரியகருப்பன்

மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.
அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.

சென்னை: மகளிருக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை விளக்கம் அளித்தாா்.

ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறியது:

மகளிருக்கான இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி கூறினாா். மகளிருக்கு இரு சக்கர வாகனங்களுக்கான தேவை தற்போது குறைந்துள்ளது. தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியாக நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதனால் மகளிா் இலவசமாகப் பயணிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்திருக்கிறது. அதனால், இரு சக்கர வாகனம் வழங்குவது அவா்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com