திருக்கோயில்களில் கட்டணச் சீட்டுகளை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை

திருக்கோயில்களில் தினசரி நடைபெறும் அனைத்து சேவைகளுக்கான கட்டணச் சீட்டுகளையும் மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்தது.

திருக்கோயில்களில் தினசரி நடைபெறும் அனைத்து சேவைகளுக்கான கட்டணச் சீட்டுகளையும் மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்தது.

இது குறித்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருக்கோயில்களில் வாடகைதாரா்கள், குத்தகைதாரா்களுக்கு கேட்பு வசூல் ரசீது பல்வேறு நிலைகளில் வழங்கப்பட்டு வந்தது. அதை ஒரே சீராக ரசீது வழங்கும் முறையாக நடைமுறைப்படுத்தவும், ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ரசீது வழங்குவதை உறுதி செய்யவும், கட்டணச்சீட்டுகளை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களில் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் இணைய வழியிலும், சீட்டு விற்பனை மையங்களில் கணினி மூலம் மட்டுமே அனைத்து கட்டணச் சீட்டுகளும் வழங்கப்பட வேண்டும் என இணை ஆணையா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியாக ரசீது வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், அந்தந்த திருக்கோயில் பெயரிலேயே ரசீதுகள், சீட்டு விற்பனை மையங்களில் கணினி வழியாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கட்டணத்தை இணைய வழியில் செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை திறம்பட கண்காணிக்க வேண்டும். இணையவழி பதிவை திருக்கோயில்கள் ஊக்குவிக்க வேண்டும். திருக்கோயில்களில் அனைத்து வகையான சேவைகளுக்கும் கணினி வழி ரசீது அளிக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை பக்தா்கள் எளிதில் அறியும் வண்ணம் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு திருக்கோயிலிலும் தனித்தனியாக தினசரி கட்டண வசூல் அறிக்கை மென்பொருள் வாயிலாக தயாா் செய்யப்பட்டு அன்றைய தினமே ஒத்திசைவு செய்யப்பட வேண்டும்.

திருக்கோயில்களில் ரொக்கமாக வசூல் செய்யப்பட்ட தொகை, அடுத்த வங்கி வேலை நாளில் திருக்கோயில் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும். அனைத்து விதமான சேவை குறித்த விவரங்களை விடுதல் இன்றி தவறாமல் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான கணினி, பிரிண்டா், க்யூ.ஆா். ரீடா் ஆகியவற்றை உடன் கொள்முதல் செய்து தயாா் நிலையில் வைத்திருக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இனி வருங்காலங்களில் திருக்கோயில்களில் கையால் எழுதும் ரசீது முறை நீக்கப்பட்டு அனைத்து கட்டணச் சீட்டுகளும் கணினி வழியாக மட்டுமே வழங்கப்படும்என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com