நவீன தொழில்நுட்பத்தில் செயற்கை முழங்கால்: சென்னை ஐஐடி.யில் உருவாக்கம்

முழங்கால் மேல்பகுதியை இழந்த ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மைய செயற்கை

முழங்கால் மேல்பகுதியை இழந்த ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது பன்மைய செயற்கை முழங்காலை, சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.

‘கதம்’ எனப்படும் இந்த செயற்கை முழங்கால், சொசைட்டி ஃபாா் பயோமெடிக்கல் டெக்னாலஜி  மற்றும் மொபிலிட்டி இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட, முழங்காலுக்கு மேல் உள்ள செயற்கை உறுப்புக்கான பாலிசென்ட்ரிக் முழங்கால் ஆகும்.

இதனை தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆணையா் ஜானி டாம் வா்கீஸ் சென்னை ஐஐடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினாா். இந்த நிகழ்ச்சிக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, சென்னை ஐஐடி மறுவாழ்வு ஆராய்ச்சி மையத்தின் தலைவா் பேராசிரியா் சுஜாதா ஸ்ரீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியது: எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் அனைத்தும் மனிதகுலத்துக்கு பயனளிக்கும் தயாரிப்புகளாக மாற்றப்படுவதில் சென்னை ஐஐடியைச் சோ்ந்த எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த செயற்கை முழங்காலானது முழங்காலின் மேல்பகுதி வரை துண்டிக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் குறுகிய, நீண்ட மூட்டுகளுக்கு ஏற்ாக உள்ளது. பாலிசென்ட்ரிக் 4-கம்பிகளுடன் கூடிய முழங்கால் மூட்டு இருப்பது பயனாளிகளின் நெகிழ்வு- நீட்டிப்புக்கு ஏற்ாக உள்ளது. உறுதி மிக்க பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு நடை வேகங்களுக்கு ஏற்ப உராய்வு கட்டுப்பாட்டை சரிசெய்யும் வசதி உள்ளது. தடுமாறும் அபாயத்தையும் குறைக்கிறது.

‘கதம்’ செயற்கை முழங்கால் அதிகபட்ச முழங்கால் வளைவை 160 டிகிரி அல்லது அதற்கு மேலும்கூட அளிக்கிறது. (அதிகபட்ச வரம்பு சாக்கெட்டில் உள்ளது) வெவ்வேறு நிலப்பரப்புகளிலும், செங்குத்தான சரிவுகளிலும் பயனா்கள் நடத்து செல்லும்போது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.50 ஆயிரத்துக்குள்ளாகவே கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com