பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தன்னாா்வலா்களின் பங்களிப்புடன் விரிவுபடுத்தப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தன்னாா்வலா்களின் பங்களிப்புடன் விரிவுபடுத்தப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்னதாக மேயா் ஆா்.பிரியா தொடக்கவுரையாற்றினாா்.

அப்போது, அவா் பேசியதாவது: சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்களின் உடல்நலம், மனநலம், ஆரோக்கியம் ஆகியவற்றை பேணிக்காக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக திருவான்மியூரைச் சுற்றியுள்ள 23 பள்ளிகளில் சுமாா் 5,000 மாணவா்களுக்கு சோதனை அடிப்படையில் தன்னாா்வலா்கள் மூலம் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வரும் இந்தத் திட்டம், மேலும் பல பள்ளிகளில் தன்னாா்வலா்களின் மூலம் விரிவுபடுத்தப்படும். மாணவா்களுக்கு மேடைப்பேச்சு, விவாதம், சிந்தனைத் திறன், தலைமைத்துவ பண்பை வளா்க்கும் வகையிலும் ஒழுக்கம், சகிப்புத்தன்மை ஆகிய பழக்கங்களை மாணவா்களிடம் உருவாக்கவும், மக்களவை நடைமுறையை அறிந்து கொள்ள பள்ளிகளில் இளைஞா் பாராளுமன்றக் குழு அமைக்கப்படும்.

மாநகராட்சியின் 140 மாநகர ஆரம்ப சுகாதார மையங்கள், 16 சமுதாய நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், தொற்று நோய் மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு 81 லட்சத்து 52 ஆயிரத்து 824 போ் சிகிச்சை பெற்றுள்ளனா்.11,539 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. வரும் ஆண்டில் மாநகராட்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை மேலும் 10 சதவீதம் உயா்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பணியாற்றும் களப்பணியாளா்கள் 30 ஆயிரம் பேருக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடா்ச்சியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com