‘எந்த வகை கரோனா வந்தாலும் எதிர்கொள்ள தயார்’: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் எந்த வகை கரோனா தொற்று பரவினாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் எந்த வகை கரோனா தொற்று பரவினாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்விநேரம் நடைபெற்றது. அப்போது, புதிய வகை கரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ. விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்கும் போது தினசரி பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அதன்பின்னர், இரண்டாம் அலையும் மூன்றாம் அலையும் எதிர்கொண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஒரு மாதமாக 50க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகி வருகின்றன. கரோனாவால் உயிரிழப்பு இல்லாமல் உள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச விமானங்களில் வரும் அனைத்து பயணிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விமானத்திலும் 2 சதவீத பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த வாரத்தில், ரூ. 360 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 2,096 அதிதீவிர சிகிச்சைப் படுக்கைகளை முதல்வர் திறந்து வைக்கவுள்ளார்.

ஆகையால், தமிழகத்தில் எந்த வகை கரோனா வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.

தடுப்பூசியை பொறுத்தவரை தமிழக அரசு ஒரு இயக்கமாக செயல்பட்டு முதல் தவணை 92.37 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை 77.19 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும், புதிய வகை கரோனா குறித்து உரிய எச்சரிக்கையுடனும், கவனமுடனும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com