ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர் கோயில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு-தேர்பவனி

மணப்பாறை ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர் கோயில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பில் மத்திய அரசு அறநிலையத்துறையில் மாற்றங்களை கொண்டு வரும்
ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர் கோயில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பு-தேர்பவனி

மணப்பாறை ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர் கோயில் தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வாசிப்பில் மத்திய அரசு அறநிலையத்துறையில் மாற்றங்களை கொண்டு வரும், மாநில அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் என வசிக்கப்பட்டது. உட்சுற்று தேர்பவனி நடைபெற்றது.

கி.பி.1274-ஆம் முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம் மணப்பாறை ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர் திருக்கோவில். ராமயண இதிகாசத்தில் சீதை பிராட்டியாருக்கு ஸ்ரீ ராமபிரான் மாய மானை மண்டியிட்டு அம்பு எய்த இடமாகவும் கூறப்படுகிறது. 

உற்சவ மூர்த்தி உள்பிரகார தேர்பவனி நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை திங்கள் முதல் நாள் தமிழ் ஆண்டுப்பிறப்பின் போது பிரசித்தி பெற்ற பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். பஞ்சாகத்தில் உள்ள குறிப்புகள் படி நிகழ்வுகளும் நடப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இன்று சித்திரை முதல் நாள் ஸ்ரீசுபகிருது ஆண்டு தொடக்கமான ஆண்டுப்பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர் திருக்கோயிலில், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று புத்தாண்டு ஸ்ரீசுபகிருது வருஷத்திய பஞ்சாங்கத்தை சிவாச்சாரியார் முத்துகண்ணன் குருக்கள் வாசிக்க, ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், வரும் ஆண்டில் மத்திய அரசு அறநிலையத்துறையில் மாற்றங்களை கொண்டு வரும், மாநில அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிக்கும் என கூறப்பட்டது. 

ஸ்ரீ மான்பூண்டி நல்லாண்டவர்

அதனைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி உள்பிரகார தேர்பவனி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பரம்பரை அறங்காவலர் முத்துவீரலெக்கையா நாயக்கர், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கண்ணன், அர்ச்சகர்கள், ஆலய ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com