தமிழ் புத்தாண்டு: திருப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை  

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வியாழக்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பூர் கோட்டை மாரியம்மன்
தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வியாழக்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பூர் கோட்டை மாரியம்மன்

திருப்பூர்: தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோட்டை மாரியம்மன்

அதிலும் குறிப்பாக திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்வும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com