புதுச்சேரியில் மீன்பிடி தடைக் காலம் தொடங்கியது

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) மீன்பிடி தடைக் காலம் தொடங்கியது.
புதுச்சேரியில் மீன்பிடி தடைக் காலம் தொடங்கியது


புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 15) மீன்பிடி தடைக் காலம் தொடங்கியது. இதையடுத்து, அந்தந்த துறைமுகங்களில் 8 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சுமாா் 61 நாள்கள் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்க ஒவ்வொரு ஆண்டும் தடை விதிக்கப்படும். இந்த ஆண்டு இந்த தடை இன்று வெள்ளிக்கிழமை (ஏப். 15) முதல் தொடங்குகிறது.

இதையடுத்து, புதுச்சேரி, காரைக்கால்  உள்ளிட்ட பகுதிகளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டுப்படகு மீனவா்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபடுவா். 

இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மீன் பிடித்துறைமுகங்கலில் மீன்கள் கையாளும் பணிகள் நடைபெறவில்லை என்பதால், மீன்கள் பதப்படுத்தப்படும் பணிகளும் நிறுத்தப்பட்டு மீன் பிடித்துறைமுகங்கள் அனைத்து மூட்டப்பட்டுள்ளது.  மீனவர்கள், மீன்கள் பதப்படுத்தும் மற்றும்  ஏற்றுமதி பணியில் ஈடுபடுவோர், மொத்த விற்பனையாளர் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 61 நாள்கள் வேலை இழக்கின்றனர். 

இதனால் மீன்பிடி தடைக் காலத்தில் புதுச்சேரி அரசு வழங்க வேண்டிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
தடைக் காலத்தின் போது மீனவா்கள், விசைப்படகுகளை பராமரித்தல் மற்றும் வலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவாா்கள். இதனிடையே தடைக் காலம் தொடங்கியதையடுத்து, மீன்களின் விலை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com