கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு

புனித வெள்ளி அனுசரிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் புனித வெள்ளி அனுசரிப்பு

கிருஷ்ணகிரி: புனித வெள்ளி அனுசரிக்கும் வகையில், கிருஷ்ணகிரியில் சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்களை ரட்சிக்க வந்த இயேசு, யுத மன்னன் பிலாத்துவால் தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.

இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலுவைப்பாதை என்னும் நிகழ்வு  நடைபெற்றது.

திருத்ததலத்தின் பங்குத்தந்தை அருட்திரு. இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, இயோசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, ஆலயத்தில் குடியிருந்த கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருத்திக் கொண்டனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்திகுப்பம், சுண்டம்பட்டி, எலத்தகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com