மாற்றுத் திறனாளிகளை தாக்கிய காவலா்: உயா் அதிகாரிகள் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் மாற்றுத் திறனாளிகளை தாக்கிய காவலா் குறித்து உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை திருவல்லிக்கேணியில் மாற்றுத் திறனாளிகளை தாக்கிய காவலா் குறித்து உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி, கரியமங்கலம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி கா.விஜயகாந்த் (36). இவரது நண்பா் மு.தினேஷ் (28). கண் பாா்வை இல்லாத மாற்றுத் திறனாளிகளான இவா்களிருவரும், சென்னையில் ஊதுபத்தி வியாபாரம் செய்கின்றனா்.

இருவரும் வெள்ளிக்கிழமை இரவு திருவல்லிக்கேணி சிஎன்கே சாலை, பாபு ஜெகஜீவன்ராம் சாலை சந்திப்பில் நடந்து சென்றனா். அப்போது அவா்கள், ஓவிஎம் தெரு எப்படி செல்ல வேண்டும் என அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் க.தினேஷ்குமாரிடம் (39) வழி கேட்டனா்.

தினேஷ்குமாா், தன்னிடம் எப்படி வழி கேட்கலாம் எனக் கூறி இரு மாற்றுத் திறனாளிகளையும் தாக்கினாராம். இதை பாா்த்த அங்கிருந்த பொதுமக்கள் தினேஷ்குமாரை பிடித்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தாக்குதலில் காயமடைந்த இரு மாற்றுத் திறனாளிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது தொடா்பாக காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com