ரூ.1 கோடி தங்கம் பறிமுதல்: விமான ஊழியர் உள்பட இருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி விமான நிலையம்
திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக தங்கத்தை கடத்தி வந்த விமான ஊழியர் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபை, குவைத், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமானங்கள்  இயக்கப்பட்டு வருகிறது. 

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சிலர் தங்களது உடைமைகளில் மறைத்து தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

சுங்கத்துறையினர் அதிரடி சோதனைகள் மூலம் தங்கம் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.

சிங்கப்பூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த விமானத்தின் ஊழியரான சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வினோத் குமார் தங்கத்தை கடத்தி வந்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த பக்ருதீன்என்ற பயணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து இருவரையும் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். சோதனையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இருவரிடம் இருந்தும் ரூ. 1 கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விமான ஊழியர் ஒருவரே கடத்தலுக்கு உடந்தையாக  இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com