ஆளுநர் வாகனம் மீது கற்கள் வீசப்படவில்லை: காவல் துறை

மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவி வாகனத்தின் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்படவில்லை என்று காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநர் வாகனம் மீது கற்கள் வீசப்படவில்லை: காவல் துறை

மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவி வாகனத்தின் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்படவில்லை என்று காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து கட்டுக்குள் வைத்திருந்ததாகவும், அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததைக் கண்டித்து, சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் மயிலாடுதுறையை அடுத்த மன்னன்பந்தலில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆளுநர் ஆர்.என். ரவி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று திரும்பியபோது, சாலைகளில் சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் கைகளில் கருப்புக் கொடிகளுடன் குழுமினர்.  அதேபோல, அந்தப் பகுதியில் காவல் துறையினரும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், அந்த வழியே ஆளுநரின் கார் அணிவகுப்பு சென்ற போது, போராட்டக் குழுவினர் திடீரென கருப்புக் கொடிகளை ஆளுநரின் காரை நோக்கி வீசியதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், மயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கார் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்பட்டதாக கூறுவது உண்மையல்ல என்று காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) விளக்கம் அளித்துள்ளார். 

ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலையில் திரண்டிருந்ததாகவும், அவர்களைத் தடுப்புகள் அமைத்து தடுத்து வைத்திருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com