தில்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரிக்கை வலுத்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பக் கோரிக்கை வலுத்துள்ள நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிய நிலையில் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்காமல் புறக்கணித்தது. தொடர்ந்து சட்டப்பேரவையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவருக்கு விரைவில் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன விழாவுக்குச் சென்று, திரும்பும் வழியில் ஆளுநரின் வாகனம் சென்ற வழியில், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடிகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், தில்லிக்கு இரண்டு நாள்கள் பயணமாக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் ஆளுநர் ஆர்.என். ரவி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com