உலக பூமி நாளை முன்னிட்டு 'மண் காப்போம்' இயக்கம் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உலக பூமி நாளையொட்டி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி நாளான
மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் பங்கேற்ற ராசிபுரம் ஈஷா தன்னார்வ தொண்டா்கள், ராசிபுரம் அரசு கல்லூரி என்சிசி மாணவர்கள்.
மண் வளப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  நிகழ்ச்சியில் பங்கேற்ற ராசிபுரம் ஈஷா தன்னார்வ தொண்டா்கள், ராசிபுரம் அரசு கல்லூரி என்சிசி மாணவர்கள்.

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உலக பூமி நாளையொட்டி, சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக பூமி நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘மண் காப்போம் என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்றது.  30 நிமிடங்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஈஷா  தன்னார்வ தொண்டா்கள், ராசிபுரம் அரசு கல்லூரி என்சிசி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று,  மண் வளம் பாதுகாப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில், சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் அரசுக் கல்லூரி என்சிசி அலுவலர் ஆர்.சிவக்குமார் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மண் வளப் பாதுகாப்பு குறித்தும், அதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராசிபுரம் ஈஷா மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏ.ராஜா, டி.அன்பழகன், கே.தங்கராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com