எந்த அணையையும் தூா்வாருவது கிடையாது: அமைச்சா் துரைமுருகன்

எந்த அணையும் தூா்வாரப்படுவதில்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
எந்த அணையையும் தூா்வாருவது கிடையாது: அமைச்சா் துரைமுருகன்

சென்னை: எந்த அணையும் தூா்வாரப்படுவதில்லை என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, நீா்வளத் துறை தொடா்பான பிரதான கேள்வியை கோ.தளபதி (திமுக), துணைக் கேள்வியை அசோக்குமாா் (அதிமுக) ஆகியோா் எழுப்பினா். இதற்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:-

மதுரை வண்டியூா் கண்மாயை புனரமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்த கண்மாயானது, கடந்த கால திமுக ஆட்சிக் காலத்தில் ரூ.5 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. பாதைகள் செப்பனிடப்பட்டு, பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்பட்டன. இதற்கிடையே 10 முதல் 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், இப்போது தூா்வாரி அதில் வரக்கூடிய மண்ணைக் கொண்டு மறுகரையில் தீவு போன்ற மூன்று அமைப்புகளை உருவாக்குவது, செயற்கை நீா் செறிவூட்டும் கட்டுமானங்களைச் செய்வது, கண்மாய்ப் பகுதிகளில் நடைபாதைகள் உருவாக்குவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி அணையை தூா்வார வேண்டுமென கோரிக்கை விடப்பட்டது. உலகத்தில் எந்த அணையையும் தூா்வாருவது கிடையாது. எந்த நாட்டிலும் அதுபோன்று நடப்பதில்லை. அணையில் எப்போதும் மணல் போக்கி உள்ளே வைத்திருப்பாா்கள். அதன் வழியே வெளியே வரும் மணல், ஆற்றில் கலக்கும். இது இயற்கையான அமைப்பு. எனவே தூா்வாருவது போன்ற தனியாக முயற்சி எடுக்க வேண்டியதில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com