பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பள்ளித் தலைமையாசிரியர்கள் வெள்ளிக்கிழமை முதல் இணையதளத்தில்
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு

!சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பள்ளித் தலைமையாசிரியர்கள் வெள்ளிக்கிழமை முதல்இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம்தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக தலைமையாசிரியர்கள்வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல்இணையதள முகவரியில்வாசகத்தை "கிளிக்' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளபயனாளர் குறியீடு, கடவுச் சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்கு உள்பட்ட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும்அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் பொதுத்தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டுகளை மேற்குறிப்பிட்ட நாள்களில் தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பெயர்ப் பட்டியலில் திருத்தம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பெயர்ப் பட்டியலில் பள்ளி மாணவர்களின் பெயர், பிறந்ததேதி, மொழிஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்துக்கான பெயர்ப் பட்டியலில் உரியதிருத்தங்கள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்களிடம் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com