கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம்: பக்தர்கள் சிறப்பு வழிபாடு

நாகை  அருகே கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம்
கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம்


 
நாகை  அருகே கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள கொளப்பாடு கிராமத்தில் ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில்,  சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல்.17 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. 

முன்னதாக, சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய செல்லமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து மேளதாளங்கள் அதிர்வேட்டு முழங்க பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக தேரில் வலம் வந்த அம்மனுக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

கரோனா தொற்று பரவல்  காரணமாக,  கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com