துறையூர்: வீதிதோறும் கானகம் கருத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் சமூக ஆர்வலர்

துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நவீன் கிருஷ்ணன் தான் உருவாக்கிய நவீன பசுமைத் திட்டத்தின் கீழ் வீதி தோறும் கானகம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் 15 ஆவது வார்டில் வீடுகளுக்கு பூச்செடிகள் வழங்கி வருகிற
15 ஆவது வார்டு மக்களிடம் மரக்கன்று வழங்கும் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி.உடன் துணைத் தலைவர் நா முரளி, 15 ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி.
15 ஆவது வார்டு மக்களிடம் மரக்கன்று வழங்கும் துறையூர் நகர்மன்ற தலைவர் செல்வராணி.உடன் துணைத் தலைவர் நா முரளி, 15 ஆவது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி.

துறையூர்: துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நவீன் கிருஷ்ணன் தான் உருவாக்கிய நவீன பசுமைத் திட்டத்தின் கீழ் வீதி தோறும் கானகம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் 15 ஆவது வார்டில் வீடுகளுக்கு பூச்செடிகள் வழங்கி வருகிறார்.

துறையூர் 15 ஆவது வார்டில் வசிப்பவர் நவீன் கிருஷ்ணன். இவர் பயோடெக்னாலஜி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் 2005 இல் முசிறி வட்டம் மாவிலிப்பட்டியில் இயற்கை சூழலில் நவீன் கார்டனை ஏற்படுத்தி அதில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பண்ணை முறையில் கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவைகளையும், செல்லப்பிராணிகள் பறவைகளையைும் வளர்க்கிறார். 

துறையூர், முசிறிப்  பகுதியில் படிக்கும் தனியார் பள்ளிக் குழந்தைகள் அவர்களுடைய சுற்றுச்சூழல் பாடம் தொடர்பாக நேரடி உற்று நோக்கலுக்காக நவீன் கார்டனுக்கு அழைத்துச் செல்வார்கள்.

2011 இல் குளோபல் நேச்சர் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி சுற்றுச் சூழல், நீர் மேலாண்மை, புவி வெப்பமயாமாதல், வன பாதுகாப்பு, காடுகளை உருவாக்குதல் தொடர்பான விழிப்புணர்வையும் அது தொடர்பான செயல்முறைகளையும் செய்கிறார். இதற்காக இவரது தொண்டு நிறுவனம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றது.

15 ஆவது வார்டு அங்கண்ணன் தெரு மற்றும் பண்டரிநாதன் கோயில் தெருவில் வீதிதோறும் கானகம் கருத்தை செயல்படுத்த ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) எடுத்துச் செல்லப்பட்ட பூந்தொட்டிகள்

இந்த நிலையில் இவருடைய மனைவி புவனேஸ்வரி துறையூர் நகரில் 15 ஆவது வார்டு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து நவீன் தனது நவீன பசுமை திட்டத்தின் கீழ் வீதிதோறும் கானகம் என்ற மையக்கருத்தின் அடிப்படையில் மார்ச் 5 ஆம் தேதி தனது வார்டில் உள்ள வீடுகளுக்கு மரக்கன்றுகள் செடிகள் வழங்கினார். இவர் வழங்கிய செடிகளை ஆடுகள், மாடுகள் தின்று சேதப்படுத்துவதை அறிந்து தற்போது அரளி செடிகளை பூந்தொட்டியுடன் வழங்கி வருகிறார். 

ஒரு பூந்தொட்டிக்கு ரூ. 350 வரை செலவு நவீன் செலவு செய்கிறார். 15 ஆவது வார்டில் செளடாம்பிகா தெரு, தெற்கு மாரியம்மன் கோயில் தெரு, அங்கண்ணன் தெரு, பண்டரி நாதன் கோயில் தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் இட வசதி உள்ள வீடுகள் முன்பும் பூந்தொட்டியுடன் செடி வைத்துள்ளார். இது வரை 15 ஆவது வார்டில் உள்ள தெருக்களில் போக்குவரத்துக்கும், தூய்மைப் பணிக்கும் இடையூறின்றி 300  செடிகள் வழங்கப்பட்டுள்ளது. அரளி செடி வளர்ப்புக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது என்கிற நிலையில் அந்த வார்டு மக்கள் மட்டுமின்றி மற்ற வார்டு மக்களிடமும் வீதிதோறும் கானகம் கருத்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com