தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: அனில் அகர்வால்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை: அனில் அகர்வால்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஆலை நிர்வாகத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்திருந்த உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது, நாடு முழுவதும் பரவலாக ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மையத்தில் ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பிறகு, ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்றும் திட்டம் இல்லை என வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்குவதற்கு கோரிக்கைகள் வந்தாலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் திட்டம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், நேர்மையான தீர்ப்பு வரும் என எதிர்ப்பார்த்திருப்பதாக  அனில் அகர்வால் தெரிவித்தார். 

மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ஆயிரக்கணக்கானோருக்கு பணி வழங்கப்பட்டு சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும், யாரும் இதுவரை பணி நீக்கம் செய்யப்படவில்லை என அனில் அகர்வால் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com