சென்னை விசாரணை கைதி மரணம்: அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம்

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது.
சென்னை விசாரணை கைதி மரணம்: அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம்

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ரூ. ஒரு லட்சம் கொடுத்து காவல்துறையினர் முடிவுக்கு கொண்டு வர முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், நியாயமான விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் இருந்த இளைஞா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணையில் பிடிபட்டவா்கள் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த க.சுரேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்ற விக்னா (28) என்பதும், சுரேஷ் மீது 2 கொலை வழக்குகள், 2 கூட்டு கொள்ளை வழக்குகள் உள்பட 6 வழக்குகள், விக்னேஷ் மீது 2 கொள்ளை வழக்குகள் உள்பட 4 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விக்னேஷ், வாந்தி எடுத்ததாகவும், பின் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பிறகு, காவல்நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com