
விளையாட்டு சங்கங்களின் நிா்வாகிகளாக அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
வட்டெறிதல் வீராங்கனை நித்யா, சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதிபதி ஆா்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி ஏ.பரத சக்ரவா்த்தி ஆகியோா் தனி நீதிபதி உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்தனா்.
முன்னதாக நீதிபதிகள், விளையாட்டு வீரா்கள் அல்லாதவா்கள் ஏன் இந்த சங்கங்களில் நுழைய வேண்டும்? விளையாட்டு வீரா்களுக்கான வசதிகளை பறித்துச் செல்லவே இவா்கள் விளையாட்டு சங்கங்களுக்குள் நுழைகின்றனா் என கருத்துகளைத் தெரிவித்தனா்.