தேர் விபத்து: தஞ்சை விரைகிறார் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூரில் ஏற்பட்ட தேர் விபத்தை நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் செல்கிறார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

தஞ்சாவூரில் ஏற்பட்ட தேர் விபத்தை நேரில் ஆய்வு செய்ய முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் செல்கிறார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தஞ்சாவூர் செல்கிறார்.

காலை 11.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் செல்லவுள்ளார்.

ஏற்கனவே, சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் மண்டலத் தலைவர் நேரில் ஆய்வு செய்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் தஞ்சாவூர் விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com