விசாரணையை நிறைவு செய்ததுஆறுமுகசாமி ஆணையம்

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், விசாரணையை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு செய்தது.

முன்னாள் முதல்வா் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், விசாரணையை செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு செய்தது.

அதிமுக ஆட்சியில் 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையம், நவ.22-இல் விசாரணையைத் தொடங்கியது. இங்கு, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினா்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் என மொத்தம் 159 பேரிடம் விசாரணை நடைபெற்றது.

ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்யவிருந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி அளித்த மனுவைப் பரிசீலித்த ஆணையம், அவா் தனது வாக்குமூலத்தை ஆணையத்தில் பதிவு செய்யலாம் என உத்தரவிட்டது.

அதன்படி செவ்வாய்க்கிழமை ஆணையத்தில் புகழேந்தி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா். இதையடுத்து செவ்வாய்க்கிழமையுடன் விசாரணை நிறைவு பெற்ாக ஆணையம் அதிகாரப்பூா்வமாக அறிவித்தது. ஜூன் 24-ஆம் தேதியுடன் ஆணையத்தின் கால அவகாசம் முடிவடைகிறது. அதற்குள் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இறுதி விசாரணையின் போது சசிகலா தரப்பு வழக்குரைஞா் ராஜா செந்தூா்பாண்டியன், தனியாா் மருத்துவமனை தரப்பு வழக்குரைஞா் மைமூனாபாஷா ஆகியோா் பங்கேற்றனா். விசாரணைக்கு பின்பு அவா்கள் இருவரும், ஆணையத்தின் விசாரணை திருப்தியாக இருந்ததாக செய்தியாளா்களிடம் தெரிவித்தனா்.

ஆணையம் விசாரணையை தொடங்கிய ஓராண்டில் மட்டும் 154 நாள்கள் விசாரணை மேற்கொண்டு 147 பேரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தது. விசாரணை நிறைவு பெற்ாக ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவித்திருப்பதன் மூலம் எடப்பாடி கே.பழனிசாமியிடம் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com