கைதி மரணம்: சிபிசிஐடி விசாரணை இன்று தொடக்கம்

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை இன்றுமுதல் தொடங்கவுள்ளன.
சிபிசிஐடி விசாரணை இன்று தொடக்கம்
சிபிசிஐடி விசாரணை இன்று தொடக்கம்

சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை இன்றுமுதல் தொடங்கவுள்ளன.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் இன்று காலை விசாரணையை தொடங்கவுள்ளார்.

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஆட்டோவில் இருந்த இளைஞா்கள் இருவரிடம் போலீஸாா் விசாரணை செய்தனா்.

விசாரணையில் பிடிபட்டவா்கள் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த க.சுரேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்ற விக்னா (28) என்பதும், சுரேஷ் மீது 2 கொலை வழக்குகள், 2 கூட்டு கொள்ளை வழக்குகள் உள்பட 6 வழக்குகள், விக்னேஷ் மீது 2 கொள்ளை வழக்குகள் உள்பட 4 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை விக்னேஷ், வாந்தி எடுத்ததாகவும், பின் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பிறகு, காவல்நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com