இறந்தவர்களை புதைப்பதில் இடுகாட்டில் இடநெருக்கடி: இறுதியில் கூட இடமில்லையா? - மக்கள் கேள்வி

செவிலிமேடு இடுகாட்டில் இறந்தவர்களை புதைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இறுதியில் கூட இடமில்லையா என  மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செவிலிமேடு இடுகாடு
செவிலிமேடு இடுகாடு

செவிலிமேடு இடுகாட்டில் இறந்தவர்களை புதைப்பதில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இறுதியில் கூட இடமில்லையா என  மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்டது செவிலிமேடு பகுதி. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது.

இங்கு  இந்து, முஸ்லிம், கிருஸ்துவர் என அனைவரும் மத நல்லிணக்கத்தை எடுத்து காட்டும் வகையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடல்நலக்குறைவால் உயிரிழக்கும் நிலையில் இவர்களை நல்லடக்கம் செய்ய எரித்தல் மற்றும் புதைத்தல் என இருவகையான ஈமச் சடங்குகளை செய்ய பாலாற்று கரையோரம் இடுகாடு உள்ளது.

இங்கு புதைக்கப்பட்டவர்களுக்கு கல்லறையும் கட்டி வழிபடுகின்றனர். இதனால் பெரும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஒருவரை புதைக்க வேண்டுமெனில் ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டும்போது எலும்பு கூடுகள் வருவதால் மனம் நெருடல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இடுகாடு பாதுகாப்பாக சுற்று சுவர் உள்ளதால் பின்புறத்தை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் எனும் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இறந்த பின்பும் மன நிம்மதி தரும் வகையில் ஈம சடங்கு செய்யவதற்கு கூட ஓருவர் மீது ஒருவரை புதைக்கும் நிலைமையை மாநகராட்சி உடனடியாக மாவட்ட நிர்வாகத்துடன் பேசி குறைகளை போக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com