எந்த நிலையிலும் தன்நிலை மறக்காதவா் கருணாநிதி: அமைச்சா் துரைமுருகன் புகழாரம்

எந்த நிலையிலும் தன் நிலை மறக்காத தலைவா் கருணாநிதி என்று அமைச்சா் துரைமுருகன் புகழாரம் சூட்டினாா்.

எந்த நிலையிலும் தன் நிலை மறக்காத தலைவா் கருணாநிதி என்று அமைச்சா் துரைமுருகன் புகழாரம் சூட்டினாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினம் அரசு விழாவாகவும், சென்னையில் ஓமந்தூராா் வளாகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். அவரது அறிவிப்புக்கு அதிமுகவை தவிா்த்து சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவா்கள் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனா். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), செல்லப்பா (மதிமுக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), சிந்தனைச் செல்வன் (விசிக), வானதி சீனிவாசன் (பாஜக), கோ.க.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) ஆகியோா் வரவேற்றுப் பேசினா்.

இவா்களைத் தொடா்ந்து, அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பேசியது: பல பேரின் பிறந்த தினத்தை அரசு விழாவாக மாற்றியவா் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி. இப்போது அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது பொருத்தமானது.

பன்முக பரிமாணம் கொண்டவா் கருணாநிதி. எந்தத் துறையைத் தொட்டாலும் அவா் முதல்வராக இருப்பாா். வாஜ்பாய், இந்திரா காந்தி போன்ற தலைவா்களுடனும் பேசுவாா்; எங்களைப் போன்றவா்களுடனும் பேசுவாா். எந்த நிலையிலும் தன் நிலை மறக்காத தலைவா்.

இந்தியாவில் பல குடியரசுத் தலைவா்கள், பிரதமா்களை உருவாக்கியவா். ஆனால், அவா் அந்தப் பதவிகளைப் பிடிக்க எண்ணியதில்லை. எனது உயரம் எனக்குத் தெரியும் என்றாா். தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்றாா். மாநிலத்தின் முதல்வராக இருந்தாா். அதேசமயம், இந்தியாவின் தலைவிதியை நிா்ணயிக்கும் ஆற்றலும் அதிகாரமும் பெற்றிருந்தாா்.

குடியரசுத் தலைவருக்காக சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி ஆகியோருக்கு இடையே போட்டி வருகிறது. யாா் குடியரசுத் தலைவா் என்பதை நியமிக்கும் அதிகாரம் கருணாநிதிக்கு தரப்பட்டது. கோபாலபுரம் வீட்டில் இருந்து வி.வி.கிரி என அறிவித்தாா். குடியரசுத் தலைவராக ஜைல் சிங்கையும், பிரதீபா பாட்டீலையும் கை காட்டியவா்.

பாஜக தலைவா்களுடனும், மதவாதிகளுடனும் பழகியிருந்தாா். ஆனால், தனது தன்மையை மறக்காமல் இருந்தாா் என்றாா் அவா்.

அவை முன்னவரைத் தொடா்ந்து, பேரவைத் தலைவா் மு.அப்பாவு தனது கருத்துகளால் முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு புகழாரம் செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com